×

ராமேஸ்வரம் – காசி ஆன்மிகப் பயணம் முதற்கட்ட பயணத்தில் பங்கேற்ற 60 பக்தர்களுக்கு பயண வழிப் பைகளை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: ராமேஸ்வரம் – காசி ஆன்மிகப் பயணம் முதற்கட்ட பயணத்தில் பங்கேற்ற 60 பக்தர்களுக்கு
பயண வழிப் பைகளை வழங்கி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (01.02.2024) சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இராமேஸ்வரம் – காசி ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்ட பயணத்தில் பங்கேற்ற 60 பக்தர்களுக்கு பயண வழிப் பைகளை வழங்கி ஆன்மிகப் பயணத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் 2022 -2023 ஆம் ஆண்டில் இராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்வதற்கு 200 நபர்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்கான செலவினம் ரூ. 50 லட்சத்தை மானியமாக வழங்கினார். அதன்படி கடந்தாண்டு 200 மூத்தக் குடிமக்கள் காசிக்கு சென்று மகிழ்ச்சியோடு திரும்பி வந்தார்கள்.

இந்த ஆன்மிகப் பயணத்தில் பயன்பெறும் பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும் என்ற கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து இந்த ஆண்டு 300 நபர்களை ஆன்மிகப் பயணமாக காசிக்கு அழைத்துச் செல்ல ரூ.75 இலட்சம் மானியமாக வழங்கியுள்ளார்கள். அதன்படி முதற்கட்டமாக இன்றைய தினம் 60 மூத்தக் குடிமக்களும் அவர்களுக்கு உதவியாக அலுவலர்கள் மற்றும் மருத்துவரும் உடன் செல்கின்றனர். மூத்தக் குடிமக்களுக்கு பயணத்திற்கான தேவையான பொருட்களுடன் கூடிய பயணவழிப் பைகளை வழங்கினோம். அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி மாதம் 8,15,22,29 ஆகிய தேதிகளில் மற்ற குழுவினர் புறப்படுகின்றனர்.

இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஆடி மாதங்களில் அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கும் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்பட்டது. தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளை ஒரே முறையில் தரிசனம் செய்திடும் வகையில் மூத்தக் குடிமக்களுக்கான கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்ட பயணத்தில் 207 நபர்கள் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி புறப்பட்டு மூன்று நாட்கள் ஆன்மிகப் பயணத்தை முடித்து திரும்பியுள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தில் ஆயிரம் மூத்தக் குடிமக்களை 5 கட்டங்களாக அழைத்துச் செல்வதற்கான செலவினத்தை அரசு மானியம் வழங்கியுள்ளார். மேலும், சீனாவிலுள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்திலுள்ள முக்திநாத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்வதற்கு மானியத் தொகையினை உயர்த்தி வழங்குகின்ற அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது. இந்து சமய அறநிலையத்துறை மூத்தக் குடிமக்களின் நலன் கருதி இத்தகைய ஆன்மிகப் பயணங்களை வகுத்து கட்டணமில்லாமல் செயல்படுத்தி கொண்டிருப்பது இறையன்பர்களும், பொதுமக்களும் மனமுவந்து பாராட்டி மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ. முரளீதரன், கூடுதல் ஆணையர் சி. ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் ச.இலட்சுமணன், பொ. ஜெயராமன், கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை, அ.அருணாச்சலம், உதவி ஆணையர்கள் அரவிந்தன், திரு.செல்வராஜ், பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

The post ராமேஸ்வரம் – காசி ஆன்மிகப் பயணம் முதற்கட்ட பயணத்தில் பங்கேற்ற 60 பக்தர்களுக்கு பயண வழிப் பைகளை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekharbhabu ,Rameswaram ,Kashi Spiritual Journey ,Chennai ,Minister of ,Hindu ,Religious Affairs ,P. K. Sekarpapu ,Chief Minister of ,Tamil Nadu ,K. ,Stalin ,Rameshwaram ,Kashi Spiritual Journey Preliminary Journey ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...