×

மேகதாது அணை குறித்து விவாதிக்க கர்நாடக அரசு நிர்பந்தம்; தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் கடும் வாக்குவாதம்

டெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்திப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேல் போல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என உத்தரவிடபட்டுள்ளது.

இந்த கூட்டத்தை பொறுத்த வரையில் இன்று கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணைகட்டுவது தொடர்பான விவாதம் நடத்த வலியுறுத்தியது. ஆனால் தமிழ்நாடு அரசை பொறுத்தவரையில், இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க கூடாது. ஏற்கனவே இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இது தொடர்பாக விவாதிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், கர்நாடக அரசு சார்பில் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் மேகதாது அணை என்பது எங்களது மாநிலத்தில் கட்டப்படுவது என்பது அவசியாமான ஒன்று. எனவே இந்த கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் இதற்கு தமிழ்நாடு அரசு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் 2 மாநில அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

The post மேகதாது அணை குறித்து விவாதிக்க கர்நாடக அரசு நிர்பந்தம்; தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் கடும் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Karnataka Govt ,Meghadatu ,Dam ,Tamil Nadu government ,Delhi ,Cauvery Water Management Authority ,SK Haldar ,Water Resources ,Sandeep Saxena ,Cauvery Technical Committee ,Subramanian ,Karnataka ,Karnataka government ,Meghadatu Dam ,Dinakaran ,
× RELATED மேகதாது அணையை தமிழகம் அனுமதிக்காது...