×

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கீடு.. உ.பி.க்கு ரூ.19,575 கோடி: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

டெல்லி: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.6,331 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஒன்றிய ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது; ரயில்வே துறை திட்டங்களுக்கு ரூ.2.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் ரூ.19,575 கோடி, ஆந்திர பிரதேசம் ரூ.9,138 கோடி, ராஜஸ்தான் ரூ.9,782 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா ரூ.7,524 கோடி, தெலங்கானா ரூ.5,071 கோடி, உத்தராகண்ட்டிற்கு ரூ.5,120 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.6,331 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கு 9 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 77 ரயில் நிலையங்கள் அம்ரித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் ரயில் தடங்களில் 98% மின்மயமாக்கப்பட்டுள்ளன; 22,000 கி.மீ. க்கு ஆற்றல். வாரத்துக்கு ஒரு வந்தே பாரத் ரயில் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.6,080 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் ரூ.251 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

The post தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கீடு.. உ.பி.க்கு ரூ.19,575 கோடி: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Railway ,U. B. ,Union Minister ,Aswini Vaishnav ,Delhi ,Ashwini Vaishnav ,Dinakaran ,
× RELATED தேர்தல் எதிரொலி திருச்சி ரயில் நிலையத்தில் சோதனை