×

ஞானவாபி மசூதி விவகாரம்: வாரணாசி மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மசூதி கமிட்டி சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு

வாரணாசி: ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு நிலவறையை வழிபட இந்துகளுக்கு அனுமதி அளித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக மசூதி கமிட்டி சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கபட்டுள்ளது.

ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு நிலவறையில் கடந்த 1993-ம் ஆண்டு வரை பூஜை நடத்தினர். ஆனால் மாநில அரசின் உத்தரவின் பேரில் பூஜைகள் என்பது நிறுத்தப்பட்டது. இது தொடர்பான மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் நேற்று ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு நிலவறையை வழிபட இந்துகளுக்கு அனுமதி வழங்கியதுடன், காசி விஸ்வநாதர் ஆலைய அறக்கட்டளை சார்பில் நியமிக்கப்படும் பூசாரி, இந்த பூஜைகளை செய்ய உத்தரவிட்டது. இதனை அடுத்து மசூதி தரப்பில் நேற்று நள்ளிரவில் உச்சநீதிமன்றத்தில் மனு தக்கல் செய்யபட்டு அவசர விசாரணைக்கு கோரபட்டது. அவசர விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடவும் உத்தரவிட்டிருந்தது.

தற்போது மசூதி தரப்பில் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், நீதிமன்ற உத்தரவை காட்டி இரவோடு இரவாக தெற்கு பகுதியில் உள்ள இரும்பு கதவுகள் அகற்றபட்டுள்ளதாகவும், பூஜைக்கு ஒருவாரம் அவகாசம் அளித்துள்ள நிலையில், இந்த விசியத்தில் மாவட்ட நிர்வாகம் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இந்து மனு தாரருடன் கூட்டி சேர்ந்து மாவட்ட நிர்வாகம் அவசரம் காட்டுவதாக தெரிவித்துள்ளது.

மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மசூதி நிர்வாக குழு வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்னறே இவ்வாறு அவசரம் காட்டுவது அதனை தடுக்கும் வகையில் இருப்பதாக மசூதி கமிட்டி சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது.

அலகாபாத் நீதிமன்றத்தில் ஏற்கனவே இந்துகள் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த நிலவறையில் பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

The post ஞானவாபி மசூதி விவகாரம்: வாரணாசி மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மசூதி கமிட்டி சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.

Tags : Gnanawabi Mosque ,Allahabad High Court ,Mosque Committee ,Varanasi District Court ,Varanasi ,Hindus ,Gnanawabi ,Mosque ,Dinakaran ,
× RELATED மதம் மாற அனைவருக்கும் சுதந்திரம்...