- டிஜிபி
- ராஜேஷ்டாஸ் வில்லுபுரம்
- Vilupuram
- சிபிசிஐடி போலீஸ்
- ராஜேஷ்தாஸ்
- பெண் எஸ்.பி
- அட்டெமுகா
- தலைமை குற்றவியல் நீதிபதி நடு
- விலுப்பூர்
- ராஜேஷ்டாஸ் வில்லுப்ரம்
- தின மலர்
விழுப்புரம்: கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசிற்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்தும் கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். மேலும், வேறு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்ற வேண்டும் என்ற அவரது கோரிக்கை ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டது. இதனால் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வாதத்தை முன்வைக்க இனிமேல் அவகாசம் தர முடியாது என்று மாவட்ட நீதிபதி பூர்ணிமா கூறியதுடன், கடைசி வாய்ப்பாக 31ம்தேதி (நேற்று) நேரில் ஆஜராகி வாதிட உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் அவர் நேற்று ஆஜராகவில்லை.இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் இன்று நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் ஆஜரானார். இதனைதொடர்ந்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸே சுமார் ஒரு மணி நேரம் வாதாடினார். பின்னர் வழக்கு விசாரணையை நாளைக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
The post பாலியல் வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.