×

பனகல் பூங்கா – பூவிருந்தவல்லி இடையே 2026ம் ஆண்டு ஜூனில் மெட்ரோ ரயில் சேவை : திட்ட இயக்குனர் அர்ஜுனன் தகவல்

சென்னை : சென்னை பனகல் பூங்கா – பூவிருந்தவல்லி இடையே 2026ம் ஆண்டு ஜூனில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டத்தில் 2 வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு ரயில் சேவை நடைபெற்று வருகிறது. இதனை 3 – 5 வழித்தடங்களாக நீட்டிக்கும் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் ரூ.61, 800 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. அதற்காக 118 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 26 கிமீ தொலைவு கொண்ட 4வது வழித்தடத்தில் உயர்மட்ட பாதை மற்றும் சுரங்க பாதைகள் அமைகின்றன.

திநகர் பனகல் பூங்கா மற்றும் கோடம்பாக்கம் இடையே சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் பணியை சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4 ரயில் பாதைகளை கடந்து தோண்டப்படும் இந்த சுரங்கம் சவாலான பணியாக இருக்கும் என்றும் வரும் டிசம்பருக்குள் அந்த பணிகள் முடியும் என்றும் கூறினார். தி- நகரில் அடுக்குமாடி கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் சுரங்கம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அர்ஜுனன் தெரிவித்தார். ரயில் பாதைகளுக்கு அடியில் சுரங்கம் தோண்டும் போது, இயந்திரத்தின் வேக மாறுபாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தண்டவாளத்தில் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ப ரயில்களின் வேகத்தை நிர்ணயிக்க பரிந்துரை செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

The post பனகல் பூங்கா – பூவிருந்தவல்லி இடையே 2026ம் ஆண்டு ஜூனில் மெட்ரோ ரயில் சேவை : திட்ட இயக்குனர் அர்ஜுனன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Panagal Park ,Poovindavalli ,Arjunan ,Chennai ,Chennai Panagal Park ,Poovrindavalli ,Chennai Metro Rail ,Dinakaran ,
× RELATED பூவிருந்தவல்லி அருகே தனியார்...