×

சாயப்பட்டறைகளில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு

சத்தியமங்கலம் :  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன. இங்கு பட்டு சேலைக்கு பயன்படுத்தும் நூல்களுக்கு சாயமிடுதல் பணி நடைபெறுகிறது. சாயப்பட்டறைகளில் இருந்து சாயக்கழிவுகளை நேரடியாக சாக்கடையில் கலந்து விடுவதாகவும், சாயக்கழிவுடன் சாக்கடை நீர் பவானி ஆற்றில் கலப்பதால் பவானி ஆறு மாசடைவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, ஈரோடு மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் செளடேஸ்வரி அம்மன் கோவில் வீதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட  சாயப்பட்டறைகளில் நேற்று ஆய்வு செய்தனர்.சாயப்பட்டறைகள் முறையாக அனுமதி பெற்று சாயக்கழிவு சுத்திகரிப்பு செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். சாயப்பட்டறைகளில் பயன்படுத்தும் சாயங்களில் நச்சு தன்மையுள்ளதா? என மாதிரி சேகரித்தனர். சாயக்கழிவுகளை நேரடியாக சாக்கடையில் வெளியேற்றக்கூடாது என்றும், கழிவு நீரை சுத்திகரித்து சாக்கடையில் வெளியேற்ற வேண்டும் என்றும் சாயப்பட்டறை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து சாயக்கழிவுகளை ஆற்றில் கலக்கும் பட்டறைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எச்சரித்தனர்….

The post சாயப்பட்டறைகளில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Sathyamangalam Kotuveerampalayam ,Erode district ,Dinakaran ,
× RELATED தாளவாடி அருகே மாங்காய்களை பறிக்க...