×

நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது: ஒன்றிய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

டெல்லி: நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என ஒன்றிய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும்.

அப்போது உரையாற்றிய அவர்;
நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. கொரோனா பரவலுக்கு பின் உலக நாடுகளின் வரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி நிலவியபோதும் இந்தியா அதனை வெற்றிகரமாக கையாண்டு கடந்து வந்தது. நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்த போது ஜி-20 நாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அடுத்த 5 ஆண்டுகள் என்பது வளர்ச்சிக்கான காலமாக இருக்கும்.

இந்தியாவில் வளர்ச்சிக்கான முன்னேற்றத்துக்கான வாப்புகளுக்கு வானமே எல்லை. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி அடைந்து உலக அளவில் போட்டியிடும் வகையில் மேம்பட்டுள்ளது. மாநிலங்களுடன் ஆலோசித்து அடுத்த தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

The post நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது: ஒன்றிய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Finance Minister ,Nirmala Sitharaman ,Union Budget ,Delhi ,Parliament ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...