×

பிரதமரின் கிசான் திட்டத்தின் மூலம் 11.8 கோடி விவசாயிகள் பயன்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை

டெல்லி: பிரதமரின் கிசான் திட்டத்தின் மூலம் 11.8 கோடி விவசாயிகள் பயன்பெற்றனர் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும். அப்போது உரையாற்றிய அவர்; ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ஆகிய 4 தரப்பின் முன்னேற்றத்துக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

4 கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் கிசான் திட்டத்தின் மூலம் 11.8 கோடி விவசாயிகள் பயன்பெற்றனர். 4 பிரிவினரின் தேவைகளை நிறைவேற்றுவதே அரசின் முக்கிய குறிக்கோள். 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது. “பத்து ஆண்டுகளில் 30கோடி பெண்களுக்கு தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது. 78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.2.3 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது இவ்வாறு கூறினார்.

The post பிரதமரின் கிசான் திட்டத்தின் மூலம் 11.8 கோடி விவசாயிகள் பயன்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை appeared first on Dinakaran.

Tags : Finance Minister ,Nirmala Sitharaman ,Delhi ,Parliament ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...