×

சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு தினசரி 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதி; பம்பை ஆற்றில் குளிக்க அனுமதி.! தேவஸ்தான துறை அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதே போல் உடனடி முன்பதிவு மூலமாக தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் கூடுதலாக அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கூடாரம் அமைத்தும் தங்கலாம் என கேரளா தேவஸ்தான துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அங்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மழை காலமாக இருப்பதாலும் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படாத காரணத்தாலும் பக்தர்கள் வருகை குறைவாகவே உள்ளது. இந்தநிலையில் ஐயப்ப பக்தர்களின் அடிப்படை வசதி தொடர்பாக கேரள தேவஸ்தான துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் எருமேலி, நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார். தொடர்ந்து பம்பை நுணங்கார் தற்காலிக பாலம் கட்டும் பணிகளை செய்த பிறகு அவர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராதாகிருஷ்ணன்; சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதே போல் உடனடி முன்பதிவு மூலமாக தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் கூடுதலாக அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அறைகள் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தால் அதில் குளிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு பம்பையில் தங்கி ஓய்வு எடுக்க வசதியாக அங்குள்ள அறைகளை ஒழுங்கு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 300 வாடகை அறைகள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது. இந்தநிலையில் மேலும் 200 அறைகள் தயாராகி வருகிறது. விரைவில் சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுப்பதற்கான அனுமதி வழங்கப்படும். பக்தர்களுக்கு அனுமதி அதே போல் பக்தர்கள் ஆங்காங்கே தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்கவும் அனுமதி அளிக்கப்படும்….

The post சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு தினசரி 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதி; பம்பை ஆற்றில் குளிக்க அனுமதி.! தேவஸ்தான துறை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Pampai river ,Ministry of Religion Information ,Thiruvananthapuram ,Minister of Devasthanam ,
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்