×

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை செய்ய கோர்ட் அனுமதி

அலகாபாத்: உத்தரபிரதேசமாநிலம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி உள்ளது. அங்கு இருந்த இந்து கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டு இருப்பதாகவும், அதனால் மசூதியை இந்துக்களின் வழிபாட்டிற்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி நீதிமன்றம் மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. இந்தநிலையில் வாரணாசி ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் பூஜை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அங்கு இந்துக்கள் பூஜை நடத்துவதற்கான பூசாரியை நியமிக்கவும் ,காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளைக்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.கே விஷ்வேஷ் உத்தரவிட்டார். இதையடுத்து அடுத்த 7 நாட்களில் ஞானவாபி மசூதியில் பூஜை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வ இந்து பரிஷத்தின் செயல் தலைவர் அலோக் குமார் இந்த முடிவை வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில் ஞானவாபி மசூதியில் உள்ள பாதாள அறையை மூடும் வரை, அதாவது 1993ம் ஆண்டு வரை அங்கு வியாஸ் என்பவர் பூஜை செய்து வந்தார்.  தற்போது அவரது பேரன் சோம்நாத் வியாஸ் பூஜை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 31 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

The post ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை செய்ய கோர்ட் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Court ,Hindus ,Gnanavabi Masjid ,Allahabad ,Kasi Vishwanath Temple ,Uttar Pradesh ,Varanasi Court ,Allahabad High Court ,Hindu ,
× RELATED வெறுப்புணர்வைத் தூண்டும் பாஜகவின்...