- அமைச்சர்
- சாமிநாதன்
- மயிலாடுதுறை
- மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை
- மயிலாடுதுறை காவேரிநகர் ஆரோக்கியநாதபுரம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவேரிநகர் ஆரோக்கியநாதபுரத்தில் மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளைக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் நினைவு அரங்கம் கட்டுமான பணிகள் நடந்து வருவதை அமைச்சர் சாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: வணிக நிறுவனங்களில் பெயர் பலகையில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டுமென்று சட்டம் இருக்கிறது. வரும் 2ம் தேதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். தொடர்ந்து பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழ்வளர்ச்சித்துறை, தொழிலாளர் துறை சார்பில் ஆய்வு செய்து தமிழில் பெயர் பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை: அமைச்சர் சாமிநாதன் பேட்டி appeared first on Dinakaran.