×

அரசு மருத்துவமனையில் முதல்முறையாக 70 ஏசி கட்டண அறைகள் திறப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

 

சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு மருத்துவமனையான கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட 70 கட்டண தனி அறைகள் திறக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டிகலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.30.5 கோடி மதிப்பீட்டில் அதிநவீன உபகரணங்களுடன் 10 உயர்சிறப்பு அறுவை அரங்கம், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு, 70 குளிரூட்டப்பட்ட தனி அறைகள் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் அளித்த பேட்டி:

மருத்துவமனை தொடங்கிய 6 மாதத்திற்குள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இதுவரை 1,05,198 புறநோயாளிகளும், உள்நோயாளிகள் 20,021 பேரும் பயன்பெற்றுள்ளனர். இந்தியாவிலேயே மருத்துவமனை தொடங்கி 6 மாதத்திற்குள் 792 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்ட மருத்துவமனையாக இது திகழ்கிறது. புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டும் தான் கட்டண படுக்கைகள் (Pay Wards) 288 என்ற எண்ணிக்கையில் உள்ளது. அதில், சாதாரண அறைக்கு ரூ.3000 வாடகையும், டீலக்ஸ் அறைக்கு ரூ. 6000 வாடகையும் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் அதிகபட்சமாக கட்டண படுக்கைகள் என்கின்ற வகையில் 70 தனியறைகள் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்டு தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு இணையாக இந்த அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்த பட்ச கட்டணமாக ரூ.1200, அதன்பிறகு ரூ.2000, அதிகபட்ச கட்டணமாக ரூ.3000 என்று தனியறைகள் அமைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி, ஆக்ஸிஜன் மானிட்டர், செவிலியரை அழைக்கும் வசதி போன்ற பல வசதிகள் உள்ளது.

இந்தியாவில் வேறெந்த மாநில அரசு மருத்துவமனைகளிலும் இல்லாத அளவிற்கான வசதிகளுடன் இந்த 10 அதி நவீன உயர்சிறப்பு அறுவை சிகிச்சை அரங்குகள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் 50 படுக்கைளுடன் கூடிய தீவிர சிகிச்சை வார்டுகளும் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. அறுவை சிகிச்சை அரங்குகள் மூலம் நரம்பியல் புற்றுநோய் இருதய அறுவை சிகிச்சை, இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சைகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் போன்றவை நோயாளர்களுக்கு கிருமி தொற்று ஏற்படாத வண்ணம் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அரங்குகளாக இருக்கிறது.

The post அரசு மருத்துவமனையில் முதல்முறையாக 70 ஏசி கட்டண அறைகள் திறப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian Perumitham ,CHENNAI ,India ,Kalainar Centenary Hospital ,M. Subramanian ,Kindikalainagar Centenary Hospital ,M.Subramanian Perumitham ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்