×

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வடக்கு, தெற்கு மண்டல ஐஜிக்கள் மாற்றம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி வடக்கு, தெற்கு மண்டல ஐஜிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வருகிற மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதில், தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய போலீஸ் அதிகாரிகள், வருவாய்துறை உள்ளிட்ட அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரு இடத்தில் பணியாற்றினோலோ, ெசாந்த ஊர்களில் பணியாற்றினாலோ அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் வடக்கு மண்டல ஐஜியாக பணியாற்றும் கண்ணனின் சொந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள் வருகிறது. அதேபோல தெற்கு மண்டல ஐஜியாக பணியாற்றும் நரேந்திரன் நாயரின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிறது. இதனால் அவர்கள் இருவரும் நேற்று மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி வடக்கு மண்டல ஐஜியாக உள்ள கண்ணன், தெற்கு மண்டல ஐஜியாகவும், தெற்கு மண்டல ஐஜியாக உள்ள நரேந்திரன் நாயர் வடக்கு மண்டல ஐஜியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பொறுப்பு உள்துறைச் செயலாளர் பனீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.

 

The post நாடாளுமன்ற தேர்தலையொட்டி வடக்கு, தெற்கு மண்டல ஐஜிக்கள் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : North ,Chennai ,South Zone ,Election Commission ,
× RELATED வீட்டு வாசலில் உறங்கியவர்கள் மீது...