×

கடந்த மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் ரூ.1.72 லட்சம் கோடி

புதுடெல்லி: ஒன்றிய அரசுக்கு கடந்த ஜனவரி மாதத்துக்கான ஜிஎஸ்டியாக ரூ.1.72 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. வரி வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு, மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்தது. ஆனால், அதையெல்லாம் தாண்டி சாதனை அளவாக ஒவ்வொரு முறையும் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரத்தை நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த மாதத்தில் நேற்று மாலை வரை ரூ.1,72,129 கோடி வசூல் ஆனதாக தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டு ஜனவரியில் ரூ.1,55,922 கோடி வசூல் ஆகியிருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் இது 10.4 சதவீதம் உயர்வாகும். நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு வசூலான ஜிஎஸ்டியில் இது 2வது உச்சமாகும்.  நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் மொத்தம் ரூ.16.69 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கடந்த மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் ரூ.1.72 லட்சம் கோடி appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு செயலாளர்கள் மாற்றம்