×

ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு நிலவறையை வழிபட இந்துக்களுக்கு அனுமதி: வாரணாசி நீதிமன்றம்

வாரணாசி: ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு நிலவறையை வழிபட இந்துக்களுக்கு அனுமதி வழங்கி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு நிலவறையில் கடந்த 1993-ம் ஆண்டு வரை பூஜை நடத்தி வந்தனர். மாநில அரசின் உத்தரவின் பேரில் இந்த பூஜை வழக்கம் என்பது இருத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் தெற்கு நிலவரையில் பூஜையை தொடங்க மனு தக்கல் செய்யபட்டது.

இந்த மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு நிலவறையில் இந்துகள் வழிபட அனுமதி வழங்கியுள்ளது. மனு தாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்னு சங்கர் 7 நாட்களுக்குல் இந்த பூஜை தொடங்கப்படும் என தெரிவித்தார். ஆனால் நீதிமன்றம் காசி விஸ்வநாதர் ஆலைய அறக்கட்டளை சார்பில் பூசாரி நியமிக்கப்படுவார். அவர் இந்த பூஜைகளை செய்யவும் உத்தரவிட்டார்.

The post ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு நிலவறையை வழிபட இந்துக்களுக்கு அனுமதி: வாரணாசி நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Hindus ,Gnanavabi Masjid ,Varanasi court ,Varanasi ,
× RELATED கைம்பெண் செங்கோல் வாங்கக் கூடாது என்பதா?: ஐகோர்ட் கிளை கண்டனம்