×

மேலும் 2 சதுப்பு நிலங்களுக்கு ராம்சார் அங்கீகாரம்.. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அரசின் முயற்சிகளுக்கு இது ஒரு சிறந்த சான்று : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழ்நாட்டில் மேலும் 2 சதுப்பு நிலங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி, நீலகிரியில் உள்ள லாங்வுட் சோலை மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு ராம்சர் உடன்படிக்கையின்கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலமாக அதாவது, ராம்சர் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

ராம்சர் உடன்படிக்கை அல்லது ஈரநிலங்களுக்கான உடன்படிக்கை என்பது, ஈரநிலங்களின் பயன்பாடு மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக சர்வதேச அளவில் ஏற்படுத்தப்பட்ட ஒரு உடன்படிக்கையாகும். 1971ம் ஆண்டில் ஈரானில் உள்ள ராம்சர் நகரத்தில் இதற்கான உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது. இயற்கை வளங்களை பாதுகாத்து ஈரநிலங்களின் செழுமையை பேணுதலே ராம்சர் உடன்படிக்கையின் குறிக்கோளாகும். சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களையும், குறிப்பாக பறவைகளின் புகலிடங்களையும் ராம்சர் அடையாளப்படுத்துகிறது.

இந்த நிலையில், ராம்சர் தலங்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நீலகிரியில் உள்ள லாங்வுட் மற்றும் கரைவேட்டி பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டின் 2 புதிய ராம்சர் தலங்களாக அங்கீகாரம் கிடைத்துள்ளது. திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்த பின் 2022 ஆண்டில் மட்டும் 13 தலங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 2 தலங்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததன் மூலம் தமிழ்நாட்டில் ராம்சர் தலங்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்பில் திமுக அரசின் அயராத முயற்சிகளுக்கு இது ஒரு சிறந்த சான்று ஆகும்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post மேலும் 2 சதுப்பு நிலங்களுக்கு ராம்சார் அங்கீகாரம்.. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அரசின் முயற்சிகளுக்கு இது ஒரு சிறந்த சான்று : முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Ramsar ,Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,Tamil Nadu ,Longwood Oasis ,Nilgiris ,Karaivetti Bird Sanctuary ,Ariyalur district ,M.K.Stalin ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...