×

பனகல் பூங்காவில் சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்-II, வழித்தடம்-4-இல் பனகல் பூங்காவில் சுரங்கம் அமைக்கும் பணியை திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் தொடங்கி வைத்தார்.

மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்-II, வழித்தடம்-4-இல் பெலிகன் என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பனகல் பூங்காவில் சுரங்கம் அமைக்கும் பணியை திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், ITD சிமெண்டேஷன் இந்தியா நிறுவனம், பொது ஆலோசகர்கள், AEON கன்சோர்டியம் மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்கள் உடனிருந்தனர்.

சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி வைத்த திட்ட இயக்குநர் தெரிவித்ததாவது:- சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மெட்ரோ இரயில் சேவையை சென்னையில் துவங்கியது. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்புக்கு பிறகு வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் II-ல் 116.1 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் 119 மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4 கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ நீளத்தில் 9 சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளது. இதில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

வழித்தடம் 4 சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள் 10 கி.மீ. நீளத்திற்கு, கலங்கரை விளக்கத்தில் தொடங்கி, சென்னையின் பழமையான பகுதிகளான மயிலாப்பூர், கச்சேரி சாலை வழியாக ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் சாலை, போட் கிளப், பனகல் பார்க் மற்றும் கோடம்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு செல்கிறது.

இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பகுதிகள் இரண்டு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு (UG-01 – கலங்கரை விளக்கம் முதல் பாரதிதாசன் சாலை வரை & UG-02 – பாரதிதாசன் சாலை முதல் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் ராம்ப் வரை) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் ITD சிமெண்டேஷன் இந்தியா நிறுவனம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த வழித்தடத்தில் நான்கு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன (Flamingo, Eagle, Peacock and Pelican). ஃபிளமிங்கோ மற்றும் கழுகு கலங்கரை விளக்கத்திலிருந்து திருமயிலை நோக்கி சுரங்கம் தோண்டும் பணியை ஏற்கனவே தொடங்கியுள்ளது. மயில் மற்றும் பெலிகன் பனகல் பூங்காவிலிருந்து கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் ராம்ப் நோக்கி சுரங்கம் தோண்டும் பணியை தொடங்குகின்றன.

மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம் 2, வழித்தடம் 4-ல் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில், சுரங்கம் தோண்டும் இயந்திரம் பெலிகன் பனகல் பூங்கா முதல் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் ராம்ப் வரையிலான (Upline) 2.1 கி.மீ நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை இன்று 31.01.2024 தொடங்கியுள்ளது.

சுரங்கம் தோண்டும் இயந்திரம் பெலிகன் வழித்தடம்-4-ல் பூமிக்கு அடியில் 18.5 மீ ஆழத்தில் கீழ்நிலையில் பனகல் பூங்காவில் தொடங்கப்பட்டு வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம் மற்றும் கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக மீனாட்சி கல்லூரியை டிசம்பர், 2024-க்குள் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் சுரங்கம் தோண்டும் இயந்திரம் பெலிகன் பனகல் பூங்காவில் இருந்து போட் கிளப் நிலையத்தை நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடங்கும். சுரங்கம் தோண்டும் இயந்திரம் மயில், பனகல் பூங்காவிலிருந்து கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் ராம்ப் (downline) நோக்கி சுரங்கம் அமைக்கும் பணியை ஏபரல், 2024 அன்று தொடங்கும்.

The post பனகல் பூங்காவில் சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் appeared first on Dinakaran.

Tags : Metro Rail ,T. Archunan ,Panagal Park ,CHENNAI ,Chennai Metro ,Pelican ,Route- ,T.Archunan ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம்: 3...