×

10 மாவட்ட அதிகாரிகளின் வீடுகளில் கர்நாடகாவில் 40 இடங்களில் ரெய்டு: லோக்ஆயுக்தா அதிரடி

சிக்மகளூரு: கர்நாடகாவில் 10 மாவட்டங்களுக்கு உட்பட 40 இடங்களில் அதிகாரிகளின் வீடுகளில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கர்நாடகா மாநிலம் சிக்மகளூரு மாவட்டம் கடூர் தாலுகாவில் வசித்து வரும் வணிக வரித்துறை அதிகாரி நேத்ராவதியின் வீட்டில், இன்று காலை லோக் ஆயுக்தா இன்ஸ்பெக்டர் அனில் ரத்தோர் தலைமையிலான அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரின் அடிப்படையில், அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல், ஹாசனில் உணவு துறை ஆய்வாளர் ஜெகநாத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் லோக்ஆயுக்தா எஸ்பி மல்லிக் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். மேலும் ஜெகநாத்தின் சகோதரரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான கிரண் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ஹாசன், சிக்மகளூரு உள்ளிட்ட மாநிலத்தின் 10 மாவட்டங்களில் 40 இடங்களில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து லோக்ஆயுக்தா அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், ‘வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரின் அடிப்படையில், சிக்மகளூரு மற்றும் ஹாசனில் வசிக்கும் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா சோதனை நடத்தியது.

அவர்களின் வீடுகள், அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதால், அவர்களுடன் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாலை இதுதொடர்பாக விபரங்கள் அளிக்கப்படும்’ என்றனர். லோக்ஆயுக்தா அதிகாரிகள் 40 இடங்களில் சோதனை நடத்தியதால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டது.

The post 10 மாவட்ட அதிகாரிகளின் வீடுகளில் கர்நாடகாவில் 40 இடங்களில் ரெய்டு: லோக்ஆயுக்தா அதிரடி appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Lokayukta ,Chikmagalur ,Nethravathi ,Kadur taluka ,Chikmagalur district, Karnataka ,
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...