×

37 வயதாகும் ரோகித்சர்மா தனது சிறந்த பார்ம் காலத்தை கடந்து விட்டார்: இங்கி. முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்காட் விமர்சனம்

விசாகப்பட்டினம்: இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில் 2வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதனிடையே இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்காட், 37 வயதை கடந்து விட்ட இந்திய கேப்டன் ரோகித் சர்மா பெரிய ரன்களை அடித்து வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் காலத்தை கடந்து விட்டதாக விமர்சித்துள்ளார். ஏறத்தாழ 37 வயதாகும் ரோகித் சர்மா தன்னுடைய சிறந்த காலத்தை கடந்து விட்டார்.

அவர் அழகான சிறிய இன்னிங்ஸ்களை விளையாடுகிறார். ஆனால் அவர் சொந்த மண்ணில் கடந்த 4 வருடங்களில் 2 டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். இந்தியா களத்தில் பலவீனமாக செயல்படுகின்றனர். எனவே இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடிப்பதற்கு இங்கிலாந்துக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக விராட் கோஹ்லி, ஜடேஜா, ஷமி, ரிஷப்பன்ட் போன்றவர்கள் இல்லாதது இங்கிலாந்தின் வெற்றிக்கான அறிகுறியை காண்பிக்கிறது என தெரிவித்துள்ளார்.

The post 37 வயதாகும் ரோகித்சர்மா தனது சிறந்த பார்ம் காலத்தை கடந்து விட்டார்: இங்கி. முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்காட் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Rohit Sharma ,Geoffrey Boycott ,Visakhapatnam ,India ,England ,Hyderabad ,Dinakaran ,
× RELATED ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக...