×

வரலாற்றில் முதல் முறையாக கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு அணி 2ம் இடம் : 97 பதக்கங்கள் குவித்து சாதனை!!

சென்னை : வரலாற்றில் முதல் முறையாக கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு அணி பதக்க பட்டியலில் 2-ம் இடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் 6வது ‘விளையாடு(கேலோ) இந்தியா இளையோர் போட்டி’ கடந்த 19ம் தேதி தொடங்கியது.நேரு ஸ்டேடியத்தில் கேலோ இந்தியா போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் போட்டிகள் நடந்துன. இதில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட 5,500 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இன்று நடந்த டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாட்டின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி தங்கம் வென்றுள்ளார். தெலுங்கானா வீராங்கனை டாண்டுவை 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மாயா ராஜேஷ்வரன் ரேவதி வீழ்த்தினார். இந்த நிலையில் கேலோ இந்தியா போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றது. கேலோ இந்தியா போட்டியில் கடந்த ஆண்டு 8-ம் இடத்தை பெற்ற நிலையில் இந்தாண்டு 2ம் இடத்தை பெற்று தமிழ்நாடு அணி சாதனை படைத்துள்ளது. 56 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என 156 பதக்கங்களுடன் மகாராஷ்டிரா அணி முதலிடத்தை பெற்றது.

35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 103 பதக்கங்களை வென்று ஹரியானா அணி 3ம் இடத்தை பிடித்துள்ளது. 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்து தமிழ்நாடு அணி அசத்தியுள்ளது. கேலோ இந்தியா வரலாற்றில் தமிழகம் அதிக பதக்கங்கள் குவிப்பது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் புனேவில் நடந்த கேலோ இந்தியா இரண்டாவது பதிப்பில் அதிகபட்சமாக தமிழகம் 88 பதக்கங்கள் குவித்திருந்தது.

The post வரலாற்றில் முதல் முறையாக கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு அணி 2ம் இடம் : 97 பதக்கங்கள் குவித்து சாதனை!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Gallo India ,Chennai ,Gallow India tournament ,6th ' ,Sports (Gelo) India Youth Tournament ,Gelo India Games ,Nehru Stadium ,Tamil Nadu Team ,Gelo India Tournament ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...