×

மதுரை அருகே திருமணத்திற்கு பிறகும் கள்ளகாதலுடன் பேசி வந்ததால் 2 பேர் கழுத்தறுத்து கொலை: கொலையாளி தப்பியோட்டம்


மதுரை: மதுரை அருகே அக்காவையும், அக்காவின் கள்ளக்காதலனையும் அந்த பெண்ணின் தம்பி வெட்டி கொலை செய்தார். காதலன் தலையை துண்டாக்கி நாடக மேடையில் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கொம்பாடி கிராமத்தில் பரபரப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

திருமணத்திற்கு பிறகும் காதலுடன் அக்கா பேசி வந்ததால் தம்பி வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார். அக்காவின் காதலன் கண்ணில் மிளகாய் போடி தூவி அரிவாளால் வெட்டி கொலை செய்தார். வீட்டில் இருந்த அக்காவையும் கழுத்தறுத்து தம்பி கொலை செய்தார். தடுக்க வந்த தாயின் கையை துண்டாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார். தப்பியோடிய பிராவின் குமாரை 2 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் கைது செய்யப்பட்டார் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

திருமங்கலம் அருகே, தகாத உறவு பிரச்னையால் அக்கா, அவரது காதலனை அரிவாளால் வாலிபர் வெட்டி கொலை செய்தார். காதலனின் தலையை நாடக மேடையில் வைத்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கொம்பாடி ஒத்தவீடு கிராமத்தை சேர்ந்தவர் நந்திக்குமார். இவரது மகன் சதீஷ்குமார் (28). கம்பி கட்டும் தொழிலாளி. அதே கிராமத்தை சேர்ந்தவர் அழகுமலை. இவருக்கு 3 மகள்கள் மற்றும் மகன் பிரவீன்குமார் (20) உள்ளனர்.

அழகுமலையின் 3வது மகள் மகாலட்சுமிக்கு 4 ஆண்டுகளுக்கு முன் வளையங்குளத்தை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. 4 நாட்களிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெற்றோர் வீட்டுக்கு மகாலட்சுமி வந்து விட்டார். இந்நிலையில், மகாலட்சுமிக்கும், கம்பி கட்டும் தொழிலாளி சதீஷ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த விபரம் பிரவீன்குமாருக்கு தெரியவந்தது. மகாலட்சுமி, சதீஷ்குமார் ஆகியோரை கண்டித்துள்ளார். இருப்பினும் காதலை தொடர்ந்துள்ளனர். இதனால், பிரவீன்குமார் ஆத்திரமடைந்தார்.

நேற்றிரவு மதுரையில் கம்பி கட்டும் வேலைக்கு சென்றுவிட்டு சதீஷ்குமார் ஊருக்கு திரும்பினார். கொம்பாடி பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஒத்தவீடு கிராமத்துக்கு நடந்து சென்றார். பின்தொடர்ந்து சென்ற பிரவீன்குமார், திடீரென சதீஷ்குமாரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி அரிவாளால் தலையை வெட்டினார். ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். பின்னர் தலையை துண்டாக்கி கொலை செய்தார். ரத்தம் சொட்ட சொட்ட தலையை எடுத்து கொண்டு கிராமத்தில் உள்ள நாடகமேடையில் வைத்து விட்டு வீட்டுக்கு சென்றார்.

ஆத்திரம் தீராத அவர், தூங்கி கொண்டிருந்த மகாலட்சுமியின் கழுத்தையும் அறுத்து கொலை செய்தார். சத்தம் கேட்டு அவரது தாய் செல்வி (எ) சின்னபிடாரி எழுந்து வந்து தடுக்க முயன்றார். அவரையும் வெட்டினார். இதில் அவரது வலது கை துண்டானது. இதையடுத்து பிரவீன்குமார் தப்பி ஓடினார். செல்வியின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சதிஷ்குமார், மகாலட்சுமி ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நாடக மேடையில் வைக்கப்பட்டிருந்த சதீஷ்குமாரின் தலையையும் கைப்பற்றினர். சதீஷ்குமாரின் அண்ணன் முத்துக்குமார் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து தனிப்படை அமைத்து பிரவீன்குமாரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மதுரை அருகே திருமணத்திற்கு பிறகும் கள்ளகாதலுடன் பேசி வந்ததால் 2 பேர் கழுத்தறுத்து கொலை: கொலையாளி தப்பியோட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Kombadi ,Tirumangalam ,
× RELATED அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால்...