×

இல்லம் தேடி கல்வித்திட்டத்துக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

சென்னை: இல்லம் தேடி கல்வித்திட்டத்துக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 2023-24ம் கல்வியாண்டில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து அரசனை வெளியிட்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம். கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும் தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்படும். யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும்
குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம் என்று விதிமுறைகளை அறிவித்தனர்.

தமிழகத்தில் கரோனா பரவலால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்வதற்காக, பள்ளிக் கல்வி துறையால் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 2 லட்சம் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை தன்னார்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பின் கூட்டிணைப்பில் சிறப்பாக செயல்படுகின்றன. இதன்மூலம் தற்போது 33 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு இல்லம் தேடி கல்வி திட்டத்தின் ஒரு பகுதியாக, தன்னார்வலர்கள் தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை பள்ளி நேரம் முடிந்ததும் மாணவர்களின் வீடுகளுக்கு அருகில் வகுப்புகள் எடுப்பார்கள். தன்னார்வ மாணவர் விகிதம் 1:20 ஆக இருக்கும், மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தன்னார்வலர்கள் தமிழ்நாடு இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12ஆம் வகுப்பு வரை படித்த அனைவரும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், பட்டம் பெற்றவர்கள் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் கற்பிக்கலாம். உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களைத் தவிர, பெற்றோர்கள் வந்து தங்களைத் தொண்டர்களாகப் பதிவு செய்து கொள்கின்றனர். ஒவ்வொரு குழு மாணவர்களுக்கும் வாரம் முழுவதும் சுமார் ஆறு மணிநேர வகுப்புகள் நடைபெறும். பள்ளியில் நடைமுறையில் உள்ள கல்வித் திட்ட முறைக்கு ஏற்ப தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதால் மாணவர்களுக்கு பாடங்கள் வலு சேர்ப்பதாக அமைகிறது. நாட்டுக்கு முன் மாதிரியாகவும், பல்வேறு மாநிலங்களை திரும்பிப் பார்க்க வைத்தது இல்லம் தேடி கல்வித் திட்டம்.

 

 

 

 

 

The post இல்லம் தேடி கல்வித்திட்டத்துக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Government of the Department of School Education ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...