×

ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை

டெல்லி: ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு செயல்படுத்தும் திட்டங்களை பட்டியலிட்டு குடியரசுத் தலைவர் உரையாற்றி வருகிறார். கடந்த ஆண்டும் நாட்டின் வரலாற்றில் வரலாற்று சிறப்புமிக்க வருடம். ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்று நடத்தியது. பாரா ஒலிம்பிக் போட்டியில் நூற்றுக்கும் அதிகமான பதக்கங்களை இந்தியா குவித்தது என முர்மு தெரிவித்தார்.

The post ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை appeared first on Dinakaran.

Tags : President ,Draupadi Murmu ,Delhi ,Unnatha Bharat ,Parliament ,Bharat ,Dinakaran ,
× RELATED டெல்லியில் உள்ள வாக்குச் சாவடியில்...