×

பெண் நிர்வாகியின் சகோதரியை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி முன்ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்

சென்னை :பெண் நிர்வாகியின் சகோதரியை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி முன்ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். தலைமறைவாக உள்ள பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். பிரதமர் மோடி வருகையின் போது ஆட்களை அழைத்து வர பாஜ விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ரூ.50 ஆயிரம் பணத்தை பாஜ மாவட்ட துணை தலைவர் ஆண்டாள் என்பவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் சொன்னபடி ஆட்களை அழைத்து வரவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆட்களை அழைத்து வர கொடுத்த ரூ.50 ஆயிரத்தை திரும்ப கேட்டு அமர்பிரசாத் தனது ஓட்டுனரான சைதாப்பேட்டை கிழக்கு மண்டல துணை தலைவராக உள்ள ஸ்ரீதர் மற்றும் பெண் நிர்வாகிகள் நிவேதா, கஸ்தூரி மற்றும் 3 பேரை கோட்டூர்புரத்தில் உள்ள ஆண்டாள் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஆண்டாள் மற்றும் அவரது சகோதரி தேவி ஆகியோரை வீடு புகுந்து ஸ்ரீதர் மற்றும் அவருடன் வந்த பெண் நிர்வாகிகள் தாக்குதல் நடத்தினர். அதில் தேவி படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக பாஜ பெண் நிர்வாகி ஆண்டாள், சகோதரி தேவி ஆகியோர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின்படி, கோட்டூர்புரம் போலீசார் பாஜ மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர்பிரசாத், சைதாப்பேட்டை கிழக்கு மண்டல துணை தலைவரும் அமர்பிரசாத் ஓட்டுனருமான ஸ்ரீதர், பாஜ பெண் நிர்வாகிகள் நிவேதா, கஸ்தூரி உள்பட 6 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 147, 452, 323, 324, 354, 427, (506)(1), 109 குற்றச்செயலுக்கு உடந்தையாக இருத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4 உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அமர்பிரசாத் கார் ஓட்டுனரான பாஜ நிர்வாகி ஸ்ரீதரை அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்த விவரங்களை அறிந்து கொண்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பாஜ நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவாகிவிட்டார். அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெண் நிர்வாகியின் சகோதரியை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி முன்ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளதால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதனிடையே அமர் பிரசாத் ரெட்டி ஆந்திராவில் பதுங்கியிருந்ததாக தனிப்படைபோலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், தற்போது அமர் பிரசாத் ரெட்டியை பிடிக்க மும்பை, டெல்லி, குஜராத்துக்கு 3 தனிப்படைகள் விரைந்துள்ளன.

The post பெண் நிர்வாகியின் சகோதரியை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி முன்ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Amarprasad Reddy ,High Court ,Chennai ,Amar Prasad Reddy ,Modi ,
× RELATED ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி...