×

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்வதில் மும்முரம்: பாமக, தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை?

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக, தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு செய்வது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. அதிமுக சார்பிலும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசார பணி குழு, விளம்பர பணி குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த குழுவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள அதிமுக, தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்க பல்வேறு வியூகங்கள் அமைத்து வருகிறது. இந்நிலையில் பாமக, தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாமக, தேமுதிகவின் எதிர்பார்ப்புகளை அதிமுக தலைமை கோரியுள்ளது.

பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து வலுவான கூட்டணி அமைக்க அதிமுக வியூகம் வகுத்துள்ளது. பாமக, தேமுதிகவுடனான கூட்டணியை உறுதி செய்யும் பணியில் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணியில், பாமகவுக்கு 7 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருந்தது.

The post நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்வதில் மும்முரம்: பாமக, தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை? appeared first on Dinakaran.

Tags : Mummuram ,Bhamaka ,Temuthiga ,Chennai ,Palamaka ,Bamaka ,
× RELATED கோவையில் தேர்தல் பணிகளுக்கு...