×

மயிலாடுதுறையில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து கால்நடை நிலையங்களிலும் இருவார கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோயை தடுப்பதற்காக கோழி வளர்ப்போர் மற்றும் பண்ணை வைத்திருப்போர் தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடப்பாண்டில் நாளை (1ம்தேதி) முதல் 14ம்தேதி வரை நடத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த முகாம் நடத்தப்பட உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கோழிக்கழிச்சல் தடுப்பூசி மருந்து ஒரு லட்சம் எண்ணிக்கையில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post மயிலாடுதுறையில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Tags : Chicken ,Pox ,Vaccination ,Camp ,Mayiladuthurai ,Mayiladuthurai district ,District Collector ,Mahabharathi ,Chickenpox ,
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...