×

சிவகாசி மாநகராட்சி பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட 428 மனுக்கள் மீது தீர்வு

சிவகாசி, ஜன. 31: சிவகாசி மாநகராட்சி பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட 428 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில், சிவகாசி மாநகராட்சியில் மக்களின் குறைகளுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற்றது.

தினமும் 6 வார்டுகள் வீதம் 48 வார்டு மக்களுக்கும் இந்த முகாம் நடைபெற்றது. முகாமில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் வந்தன. மனுக்களை பெற்ற மாநகராட்சி நிர்வாகம் மாநகராட்சி, குடிநீர் வழங்கல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, காவல்துறை, வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வளா்ச்சி, சமூக நலன் மகளிர் உரிமைத் துறை, மின் வாரியம், வருவாய் உட்பட 13 துறைகளுக்கு மனுக்களை துறை வாரியாக பிரித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தது.

அதில் சிவகாசி மாநகராட்சியிடம் நிவாரணம் பெற 428 பேர் மனு கொடுத்தனர். இதில் சாலை வசதி, குடிநீர், மின்விளக்கு, கழிப்பிட வசதி வேண்டியும், குப்பை வரியை குறைக்க கோரியும், பாதாள சாக்கடை திட்டம் வேண்டும் என வலியுறுத்தியும், வாறுகால் சுத்தப்படுத்த கோரியும் மனுக்கள் வந்தது.
மனுக்களை பெற்ற மாநகராட்சி நிர்வாகம் அதற்கென ஊழியர்களை அனுப்பி மனுக்கள் குறித்து விசாரித்தது. இதற்கிடையில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு வந்த 428 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். இதற்குரிய பதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

The post சிவகாசி மாநகராட்சி பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட 428 மனுக்கள் மீது தீர்வு appeared first on Dinakaran.

Tags : Sivakasi Corporation ,Sivakasi ,Chief Minister ,M.K. ,Stalin ,Corporation ,
× RELATED மாநில தடகள போட்டியில் சிவகாசி ஆர்எஸ்ஆர் பள்ளி மாணவர்கள் சாதனை