×
Saravana Stores

சிவகங்கையில் ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டம்: 400 பேர் கைது

 

சிவகங்கை, ஜன. 31: சிவகங்கையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 400பேர் கைது செய்யப்பட்டனர். சிவகங்கையில் அரண்மனை வாசல் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்கள், தினக்கூலி, தொகுப்பூதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்,

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், மகேஸ்வரன், முத்துப்பாண்டியன், நாகராஜன், ராம்குமார் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் குமார் தொடங்கி வைத்தார். அரண்மனை வாசல் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 150பெண்கள் உள்பட 400பேரை சிவகங்கை நகர் போலீசார் கைது செய்தனர்.

The post சிவகங்கையில் ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டம்: 400 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Jacto Jio picket protest ,Sivagangai ,Jacto Jio ,Jacto Geo ,Jacto Geo picket ,Dinakaran ,
× RELATED கை, கழுத்து அறுபட்டு சாலையில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு