×

இளையான்குடி அருகே கல்லூரி பஸ்கள் மோதி மாணவிகள் காயம்: புத்தக திருவிழாவுக்கு சென்ற போது விபத்து

 

இளையான்குடி, ஜன 31: சிவகங்கையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவை பார்ப்பதற்காக இளையான்குடி தனியார் கல்லூரியிலிருந்து, மூன்று பஸ்களில் மாணவிகள் நேற்று அழைத்துச் செல்லப்பட்டனர். இளையான்குடியைக் கடந்து சீராத்தன்குடி காஸ் நிரப்பும் ஆலை அருகே சென்ற போது, முன்னால் சென்ற பஸ் டிரைவர் திடீரென பிரேக் அடித்துள்ளார். அதைப் பார்த்து பின்னால் வந்த கல்லூரி பஸ் டிரைவரும் பிரேக் அடிக்க முயன்றுள்ளார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற பஸ் மீது பின்னால் வந்த பஸ் மோதியது. இதில் மாணவிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக மாணவிகளை பத்திரமாக மீட்டு வேறு பஸ்சில், சிவகங்கைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் இளையான்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இளையான்குடி அருகே கல்லூரி பஸ்கள் மோதி மாணவிகள் காயம்: புத்தக திருவிழாவுக்கு சென்ற போது விபத்து appeared first on Dinakaran.

Tags : Ilaiyankudi ,Ilayayankudi ,Ilayayankudi Private College ,Sivagangai ,Seerathankudi ,
× RELATED தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்