×

திண்டுக்கல்லில் தென்மண்டல யோகாசன போட்டி தமிழ்நாடு சாம்பியன் பட்டம் வென்றது

திண்டுக்கல், ஜன. 31: திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் தென் மண்டல அளவிலான கேலோ இந்தியா பெண்கள் யோகாசன லீக் போட்டி யோகாசன போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். கல்லூரி அறங்காவலர் சூர்யா ரகுராம் போட்டியை துவக்கி வைத்தார்.

கடந்த 2 நாட்களாக நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு அணி 8 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் பெற்று முதலிடமும், பாண்டிச்சேரி அணி 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் பரிசுகளை வென்று இரண்டாம் இடமும். கர்நாடகா அணி 1 தங்கம், 1 வெள்ளி பதக்கம் பெற்று மூன்றாம் இடம் பிடித்தது. பின்னர் நடந்த பரிச்சளிப்பு விழாவிற்கு, போட்டி கேலோ இந்தியா பெண்கள் அணி ஒருங்கிணைப்பாளர் சகாதேவன் அஸ்மிதா, விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் மகேந்திரன் சாலட், தமிழ்நாடு யூத் யோகாசன விளையாட்டு தலைவர் பிராஷ்மால் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

The post திண்டுக்கல்லில் தென்மண்டல யோகாசன போட்டி தமிழ்நாடு சாம்பியன் பட்டம் வென்றது appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,South Zone Yogasana Competition ,Dindigul ,South Zone ,Galo ,India Women's Yogasana League Yogasana Competition ,PSNA College of Engineering and Technology ,Tamilnadu ,Karnataka ,Andhra Pradesh ,Pondicherry ,Telangana ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...