×

ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் மன்வேந்திரசிங் மனைவி கார் விபத்தில் பலி

புதுடெல்லி: பாஜ மூத்த தலைவராகவும், ஒன்றிய அமைச்சராகவும் இருந்தவர் ஜஸ்வந்த் சிங். இவரது மகன் மன்வேந்திரா சிங். இவர் 2004, 2009 நாடாளுமன்ற தேர்தலில் பார்மர் தொகுதியில் இருந்து பாஜ சார்பில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 2018ல் காங்கிரசில் சேர்ந்தார். இவர் நேற்று டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி காரில் குடும்பத்துடன் சென்று கொண்டு இருந்தார். டெல்லி-மும்பை அதிவிரைவு சாலையில் அல்வார் பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மேம்பால சுவரில் மோதியது. இதில் மன்வேந்திர சிங் மனைவி சித்ரா(55) பலியானார். மன்வேந்திர சிங்(59) மற்றும் அவரது மகன் ஹமிர்(25) மற்றும் டிரைவர் படுகாயம் அடைந்தனர்.

The post ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் மன்வேந்திரசிங் மனைவி கார் விபத்தில் பலி appeared first on Dinakaran.

Tags : Rajasthan Congress ,President ,Manvendra Singh ,New Delhi ,Jaswant Singh ,BJP ,Union Minister ,Parmar ,Congress ,Manvendrasingh ,
× RELATED ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு!