×

ஆர்ஆர்பி மாஜி தலைவருக்கு 5 ஆண்டு சிறை

புதுடெல்லி: 2010ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி 1936 ஊழியர்களை ரயில்வே பணிக்கு தேர்வு செய்வது தொடர்பாக தேர்வு அறிவிப்பு வெளியானது. தேர்வுக்கான கேள்வித்தாள் திடீரென வெளியானது. இதையடுத்து ரயில்வே தேர்வு வாரிய மும்பை தலைவர் சதேந்திர மோகன் சர்மா மற்றும் 9 பேர் மீது 193 விண்ணப்பதாரர்களிடம் இருந்து தலா ரூ.4லட்சம் வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த ஐதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 10 பேருக்கும் 5 ஆண்டு சிறைதண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.

The post ஆர்ஆர்பி மாஜி தலைவருக்கு 5 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : RRP Majhi ,New Delhi ,Railway Selection Board ,Mumbai ,Chadendra Mohan Sharma ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு