×

யு-19 உலக கோப்பை சூப்பர் 6 முஷீர் கான் சதத்தால் இந்தியா அபார வெற்றி

புளோயம்போன்டீன்: ஐசிசி யு-19 உலக கோப்பை தொடரின் சூப்பர் 6 முதல் பிரிவு ஆட்டத்தில், நியூசிலாந்து யு-19 அணியுடன் நேற்று மோதிய இந்தியா யு-19 அணி 214 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. மங்காவுங் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச… இந்தியா யு-19 அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 295 ரன் குவித்தது. முஷீர் கான் 131 ரன் (126 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்), ஆதர்ஷ் சிங் 52, கேப்டன் உதய் சாஹரன் 34 ரன் விளாசினர்.

முஷீர் கான், இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சர்பராஸ் கானின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து களமிறங்கிய நியூசி. யு-19 அணி 28.1 ஓவரில் வெறும் 81 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. 214 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்தியா யு-19 அணி சூப்பர் 6 முதல் பிரிவில் 6 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது. தொடர்ச்சியாக 2வது சதத்தை விளாசி அசத்திய முஷீர் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இவர் நேற்று பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 3.1 ஓவரில் 10 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றி ஆல்-ரவுண்டராக ஜொலித்தார்.

The post யு-19 உலக கோப்பை சூப்பர் 6 முஷீர் கான் சதத்தால் இந்தியா அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : U-19 World Cup Super 6 ,Musheer Khan ,India ,Bloemfontein ,U-19 ,New Zealand U ,19 ,Super 6 ,ICC U-19 World Cup ,Mangaung Oval ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!