×

டென்னிஸ் இரட்டையர் தமிழகத்துக்கு 2 தங்கம்

சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவில் தமிழ்நாடு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியது. நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கில் நேற்று நடந்த மகளிர் இரட்டையர் பைனலில் தமிழ்நாடு வீராங்கனைகள் மாயா ரேவதி – லட்சுமி பிரபா இணை 6-2, 6-1 என்ற நேர் செட்களில் கர்நாடகாவின் ஸ்ரீநிதி பாலாஜி – சுகிதா மரூரி இணையை வீழத்தி தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. ஆண்கள் இரட்டையர் பைனலில் தமிழக வீரர்கள் ரெதின் பிரணவ் – கந்தவேல் மகாலிங்கம் இணை 6-3, 6-1 என்ற நேர் செட்களில் மகாராஷ்டிராவின் முகேஷ் ஜாதவ் – சமீர் வரிக் ஜோடியை வீழத்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

The post டென்னிஸ் இரட்டையர் தமிழகத்துக்கு 2 தங்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Gallow India Youth Games ,doubles ,Nungambakkam ,Maya Revathi ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...