×

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி: மகாத்மா காந்தி நினைவு தினத்தை, உலக தொழுநோய் ஒழிப்பு தினமாக நேற்று கடைபிடிக்கப்பட்டது. நேற்று துவங்கி வரும் 13ம் தேதி வரை களங்கம் தவிர்ப்போம், கண்ணியம் காப்போம் என்ற கருப்பொருளுடன், இருவார விழாவாக மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஸ்பர்ஷ் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் சாந்தி பேரணியை தொடங்கி வைத்தார். இதில் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, தர்மபுரி – சேலம் பிரதான சாலை வழியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை சென்றடைந்தது.

The post தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Leprosy Eradication Awareness Rally ,Dharmapuri ,Mahatma Gandhi Memorial Day ,World Leprosy Eradication Day ,Avoid ,Let's ,Dinakaran ,
× RELATED பட்டுக்கூடு வரத்து சரிவு