×

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட இந்திய தொழிற்சங்க மையம் சார்பில், தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிஐடியூ மாநில செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜீவா, மாநில குழு கலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், கட்டுமான முறை சாரா தொழிலாளர்கள் நலவாரியம் ஆவண தரவுகள் குறித்து, விசாரணை நடத்த வேண்டும். பல மாதங்களாக நிறுத்தி வைத்துள்ள பணப்பலன் வழங்ககோரி விண்ணப்பித்த தொழிலாளர்களுக்கு, உடனடியாக வழங்க வேண்டும். பென்ஷனை ₹3 ஆயிரம் உயர்த்தி வழங்கி, பெண்களுக்கு 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri District Indian Trade Union Centre ,BSNL ,CITU ,State Secretary ,Nagarajan ,District Secretary ,Jeeva ,State Committee ,Kalavati ,Trade Unions ,Dinakaran ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...