×

10.5% இடஒதுக்கீடு வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு மனு

புதுடெல்லி: மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். இதனை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த அபிஷ்குமார், உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார். உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்தனர். அதை தொடர்ந்து அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாலு என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில், ‘உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மருத்துவ மாணவர்களுக்கான கவுன்சில் நடைபெறும் நிலையில், இவ்வழக்கை விரைவாக நடத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தமிழக அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று கோரியுள்ளார். ஏற்கனவே இவ்வழக்கு தொடர்பாக 13 கேவியட் மனுக்களும், 6 மேல் முறையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. …

The post 10.5% இடஒதுக்கீடு வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு மனு appeared first on Dinakaran.

Tags : Supremgordt ,New Delhi ,Valians ,Dinakaran ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...