×

அண்ணாமலைக்கு காவடி தூக்க நாங்க இளிச்சவாயர்களா? எடப்பாடியை முதல்வர் வேட்பளராக ஏற்காததால் கூட்டணி முறிந்தது: உண்மையை போட்டு உடைத்த திண்டுக்கல் சீனிவாசன்

ஒட்டன்சத்திரம்: ‘அண்ணாமலைக்கு காவடி தூக்க நாங்க என்ன இளிச்சவாயர்களா?. எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்காததாக் அதிமுக-பாஜ கூட்டணி முறிந்தது’ என்று திண்டுக்கல் சீனிவாசன் உண்மையை போட்டு உடைத்து உள்ளார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை அண்ணாமலை அவதூறாக பேசி வந்தார். அண்ணாமலைதான் வருங்கால முதல்வர் என பாஜவினர் கூறி வந்ததை எங்களால் ஏற்க முடியவில்லை. அண்ணாமலைதான் முதல்வர் வேட்பாளர் என பாஜவினர் கூறி வந்ததை கண்டிக்க அக்கட்சி தலைமையிடம் முறையிட்டோம். அடுத்த முதல்வர் அண்ணாமலை வாழ்க என சொன்னால் நாங்கள் என்ன இளிச்சவாயர்களா?. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க பாஜவின மறுத்துவிட்டனர். அண்ணாமலைதான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் எங்களை நிர்ப்பந்தம் செய்தனர். அதனால் தான் பாஜ கூட்டணியை விட்டு நாங்கள் வெளியே வந்தோம். அமித்ஷா, ஜே.பி.நட்டாவிடம் முறையிட்ட பிறகு பாஜவுடன் கூட்டணி இல்லை என்று தைரியமாக அறிவித்தார் எடப்பாடி. இனி பாஜவுடன் கூட்டணி இல்லை என்று அழுத்தம் திருத்தமாக எடப்பாடி பழனிச்சாமிகூறிவிட்டார். பழநிக்கு கூட காவடி தூக்குவோம். ஆனால் அண்ணாமலைக்கு நாங்கள் காவடி தூக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

* ‘முதல் போட்டு நாங்க கூட்டம் நடத்துறோம் கைதட்டி சிரிங்க…’

திண்டுக்கல் சீனிவாசன் பேசி கொண்டிருக்கும்போதே சிலர் கூட்டத்தை விட்டு கலைந்து சென்றனர். அப்போது திண்டுக்கல் சீனிவாசன், ‘‘ஏப்பா… நாங்க முதல் போட்டு கூட்டம் நடத்துறோம். யாராவது கைதட்டி சிரிங்கப்பா’’ என விரக்தியுடன் பேசினார்.

* மண் குதிரை ஓபிஎஸ்

‘ஓபிஎஸ் எந்த நீதிமன்றத்திற்கு சென்றாலும் தொடர்ந்து தோல்வி தான் கிடைக்கும். அவர் ஒரு மண் குதிரை.அவரை நம்பி யாரும் செல்ல வேண்டாம்’ என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

 

The post அண்ணாமலைக்கு காவடி தூக்க நாங்க இளிச்சவாயர்களா? எடப்பாடியை முதல்வர் வேட்பளராக ஏற்காததால் கூட்டணி முறிந்தது: உண்மையை போட்டு உடைத்த திண்டுக்கல் சீனிவாசன் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Alliance ,Edappadi ,ministerial ,Dindigul Srinivasan ,Otanchatram ,AIADMK ,BJP alliance ,MGR ,Thangachiammapatti ,Othanchatram, Dindigul district ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...