×

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு

கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், நீர்வரத்தின்றி பெரியாறு அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால், அணையின் நீர்மட்டம் 141 அடியாக உயர்ந்தது. இதனால், தேனி மாவட்ட பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், சமீபத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், நீர்வரத்தின்றி அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து 136.45 அடியாக உள்ளது 152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 136.45 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 283 கனஅடி. அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 6,231 மில்லியன் கனஅடி.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 70.01 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 882 கனஅடி. அணையிலிருந்து வினாடிக்கு 5829 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 5829 மில்லியன் கனஅடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 29 கனஅடி. அணையிலிருந்து வினாடிக்கு 29 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் இருப்புநீர் 100 மில்லியன் கனஅடி. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.50 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 கனஅடி. அணையிலிருந்து 80 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 425.14 மில்லியன் கனஅடி. மழை எங்கும் பதிவாகவில்லை.

The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு appeared first on Dinakaran.

Tags : Periyar Dam ,Mullaiperiaru dam ,Theni ,
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...