×

எந்த நாட்டுக்கும் வழங்காத சாதனை 2023ல் 14 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கல்: அமெரிக்க தூதரகம் தகவல்

புதுடெல்லி: 2023ம் ஆண்டில் மட்டும் இந்தியர்களுக்கு 14 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு 10 அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களில் ஒருவர் இந்தியராக உள்ளார். பி1 மற்றும் பி2 வகை விசாக்களுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. மும்பை, டெல்லி, ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் செயல்படும் தூதரகங்கள் மூலம் மாணவர் விசாக்கு அதிகளவில் விண்ணப்பிக்கப்படுகின்றன.

அமெரிக்காவில் படிக்கும் 10 லட்சம் சர்வதேச மாணவர்களில் 2.5 லட்சம் பேர் இந்தியர்களாக உள்ளனர். 2023ம் ஆண்டில் மட்டும் இந்தியர்களுக்கு 14 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 60 சதவீதம் அதிகமாகும். எந்த நாட்டுக்கும் இவ்வளவு விசாக்களை வழங்கவில்லை. விசிட்டிங் விசா சந்திப்புக்கான காத்திருப்பு நேரம் 1,000 நாட்களில் இருந்து 250 நாட்களாக (75 சதவீதம்) குறைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

The post எந்த நாட்டுக்கும் வழங்காத சாதனை 2023ல் 14 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கல்: அமெரிக்க தூதரகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : U.S. Embassy Information ,New Delhi ,Indians ,US Embassy ,Delhi ,US ,US Embassy Information ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு