×
Saravana Stores

சர்வீஸ் புக்கில் நாமினியாக நியமிக்காததால் பெண் நீதிபதி கழுத்தை நெரித்து கொலை : மத்திய பிரதேசத்தில் பயங்கரம்

போபால்: சர்வீஸ் புக்கில் தன்னை நாமினியாக நியமிக்காததால் ஆத்திரமடைந்த கணவர் பெண் நீதிபதிைய கழுத்தை நெரித்து கொன்ற பயங்கர சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்தது. மத்திய பிரதேச மாநிலம் போபால் அடுத்த ஷாபுரா நீதிமன்றத்தின் துணை டிவிஷனல் மாஜிஸ்திரேட் நிஷா நபிட் (40) என்பவர் பணியாற்றி வந்தார். இவரது கணவர் மணீஷ் சர்மா. இவர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போதிருந்தே மணீஷ் சர்மாவுக்கு எவ்வித வேலையும் கிடைக்காமல் சும்மாகவே இருந்து வந்தார்.

இதனால் கணவன் – மனைவிக்குள் பிரச்னை இருந்து வந்துள்ளது. மேலும் அடிக்கடி பணம் கேட்டு நிஷா நபிட்டிடம், மணீஷ் சர்மா தொந்தரவு செய்து வந்தார். இந்நிலையில் நிஷா நபிட்டின் அரசுப்பணி சேவை புத்தகம், காப்பீடு மற்றும் வங்கிக் கணக்கில், தன்னை நாமினியாக பரிந்துரைக்க வேண்டும் என்று மணீஷ் சர்மா வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. ஆவேசமடைந்த மணீஷ் சர்மா, நிஷா நபிட்டை தலையணையால் அழுத்தி கழுத்தை நெரித்தார். இதனால் மயக்கநிலை அடைந்த நிஷா நபிட்டை, அப்பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தார்.

ஆனால் அவரது மூக்கு மற்றும் வாயிலிருந்து ரத்தம் வெளியேறியதால் மயக்க நிலையில் நிஷா நபிட் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். மேலும் மாஜிஸ்திரேட்டின் மரணத்தில் சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நிஷா நபிட்டின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மனைவியை தலையணையால் அழுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர் மணீஷ் சர்மாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சர்வீஸ் புக்கில் நாமினியாக நியமிக்காததால் பெண் நீதிபதி கழுத்தை நெரித்து கொலை : மத்திய பிரதேசத்தில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Pradesh ,Bhopal ,Madhya Pradesh ,Nisha Nabit ,Deputy Divisional Magistrate ,Shapura Court ,Bhopal, Madhya Pradesh ,
× RELATED மபியில் சரக்கு ரயிலின் பெட்டிகள் கழன்று விபத்து