×

கேலோ இந்தியா போட்டி!: தமிழ்நாட்டுக்கு மேலும் 2 தங்கம் வென்று ஆடவர், மகளிர் இரட்டையர்கள் அசத்தல்..!!

சென்னை: கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில் 2 தங்கம் வென்று ஆடவர், மகளிர் இரட்டையர்கள் அசத்தியுள்ளனர். 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023 சென்னை, திருச்சி, மதுரை, கோயம்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. வருகிற 30ம் தேதியுடன் போட்டிகள் முடிகிறது. 31ம் தேதி நிறைவு விழா நடக்கிறது. இந்நிலையில், கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில் 2 தங்கம் வென்று ஆடவர், மகளிர் இரட்டையர்கள் அசத்தியுள்ளனர். கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியின் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழ்நாடு தங்கம் வென்றது.

தமிழ்நாடு அணியை சேர்ந்த வீரர்கள் பிரணவ், மகாலிங்கம் இணை இறுதி போட்டியில், 6-3, 6-1 என்ற நேர் செட்டில் மகாராஷ்டிரா இணையை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. இதேபோல், கேலோ இந்தியா டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவிலும் தமிழ்நாடு அணி தங்கம் வென்று அசத்தியிருக்கிறது. இறுதிப்போட்டியில், தமிழ்நாட்டின் ரேவதி, லஷ்மி இணை 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் கர்நாடக இணையை வீழ்த்தி தங்கம் வென்று அபார வெற்றி பெற்றுள்ளனர்.

The post கேலோ இந்தியா போட்டி!: தமிழ்நாட்டுக்கு மேலும் 2 தங்கம் வென்று ஆடவர், மகளிர் இரட்டையர்கள் அசத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Gallo India Tournament! ,Tamil ,Nadu ,CHENNAI ,Gallo India Youth Games ,6th Gallo India Youth Games 2023 ,Trichy ,Madurai ,Coimbatore ,Gallow India Tournament ,Dinakaran ,
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...