×

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி; வாலிபர் கைது

பெரம்பூர்: சென்னை பெரம்பூர் சிறுவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் வினோத் மைக்கேல் (27). ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இவர், கடந்த 2 வருடங்களாக சென்னையில் தங்கியிருந்து பெரம்பூர் பகுதியில் உள்ள ஹோட்டலில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில், வியாசர்பாடி ரேணுகாம்பாள் கோயில் 5வது தெருவை சேர்ந்த விஜயகுமார் (30) என்பவருடன் மைக்கேலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது விஜயகுமார், ‘’தான் ரயில்வேயில் பணியாற்றி வருகிறேன். உங்களுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருகிறேன் என மைக்கேலிடம் இருந்து கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் சிறுக, சிறுக 15 லட்ச ரூபாய் வரை பெற்றுள்ளார்.

இதன்பிறகு வினோத்துக்கு பணி நியமன ஆணையும் கொடுத்துள்ளார்.அந்த ஆணையை எடுத்துக்கொண்டு வினோத் மைக்கேல் மும்பைக்கு பணியில் சேர சென்றபோது அது போலியான பணிஆணை என்பது தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தார். இதன்பிறகு சென்னைக்கு வந்த மைக்கேல், இதுகுறித்து விஜயகுமாரிடம் கேட்டபோது பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதுசம்பந்தமாக மைக்கேல் கொடுத்த புகாரின்படி, செம்பியம் போலீசார் வழக்குபதிவு செய்து நேற்று விஜயகுமாரை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் விஜயகுமாரை அடைத்தனர்.

The post ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி; வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Vinod Michael ,Siruvallur ,Perambur, Chennai ,Ramanathapuram district ,Chennai ,Vyasarpadi Renukampal temple ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு