×

நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி காவல் நிலையத்தில் பாஜகவினர் மனு

திருப்பதி: நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி காவல் நிலையத்தில் பாஜகவினர் மனு அளித்துள்ளனர். தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள அலிபிரி சாலையில் நடைபெற்றது.

உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பு நடைபெற்று வந்த காரணத்தால் அந்த வழியாக சென்ற பேருந்துகள், வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் அருகிலுள்ள ஹரே ராம ஹரே கிருஷ்ணா சாலை வழியாக திருப்பி விட்டனர். அந்த சாலை மிகவும் குறுகலாக இருந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் அப்பகுதியில் மருத்துவமனைகள் உள்ளதால் நோயாளிகள் செல்லும் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது. திருப்பதி ஏழுமலையான் கோயில் திருப்பணிக்கு செல்லும் ஊழியர்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள், கோயிலின் ஊழியர்கள் மற்றும் படப்பிடிப்பு குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து சிறுது நேரத்தில் போக்குவரத்தை போலீசார் இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். பின்னர் படக்குழுவினர் திருப்பதியிலுள்ள கோவிந்தராஜசாமி கோயில் அருகே படப்பிடிப்பை தொடங்கினர். கோயிலுக்கு வந்த பக்தர்களை அங்கிருந்த பவுன்சர்கள் அப்புறப்பதும் பணியில் ஈடுபட்டனர். இதனை தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் படம்பிடிக்க முயன்றபோது அவரின் செல்போனை பிடிங்கி வைத்துக்கொண்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தகவலறிந்த பாஜகவினர் திருப்பதி காவல் நிலையத்திற்கு சென்று படப்பிடிப்பு குழுவினருக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் செய்தி தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் மனு அளித்துள்ளனர்.

The post நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி காவல் நிலையத்தில் பாஜகவினர் மனு appeared first on Dinakaran.

Tags : BJP ,Dhanush ,Tirupati ,Alibiri Road ,
× RELATED பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி