×

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு ஸ்பெயின் முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

மாட்ரிட்: தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு ஸ்பெயின் முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் 4-வது பெரிய பொருளாதாரமாக ஸ்பெயின் திகழ்வது போல் இந்தியாவின் 2-வது பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டுடன் வணிக உறவு மேற்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளில் 6-வது பெரிய நாடாக ஸ்பெயின் உள்ளது. கெஸ்டாம்ப், கமேசா, ரோக்கா, உர்பேசர், இன்கிடீம், ஆம்ப்போ உள்ளிட்ட நிறுவனங்கள் தற்போது தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்திடும் விதமாக உங்களுடைய | முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என மேட்ரிட்டில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு ஸ்பெயின் முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Tamil Nadu ,K. Stalin ,Madrid ,Chief Minister MLA ,India ,Spain ,European Union ,Chief Minister of State ,
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்