×
Saravana Stores

சிங்காரச் சென்னை 2.0 திட்டம்; சென்னை உருது பெண்கள் தொடக்கப் பள்ளியில் புதிதாக கட்டப்படவுள்ள கூடுதல் பள்ளிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், புளியந்தோப்பு, சென்னை உருது பெண்கள் தொடக்கப் பள்ளியில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள பள்ளிக் கட்டடப் பணியினை இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (30.01.2024) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியின் கீழ், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-77க்குட்பட்ட புளியந்தோப்பு, போகிப்பாளையம் பகுதியில் உள்ள சென்னை உருது பெண்கள் தொடக்கப்பள்ளியில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய 6 வகுப்பறைகளுக்கான கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்டப்படுகிறது.

இந்நிகழ்வின் போது மேயர் ஆர் பிரியா, மத்திய வட்டார துணை ஆணையர் கே. ஜே. பிரவீன் குமார் இ.ஆ.ப., நியமனக் குழு உறுப்பினர் சொ.வேலு, மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் சுமதி மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சிங்காரச் சென்னை 2.0 திட்டம்; சென்னை உருது பெண்கள் தொடக்கப் பள்ளியில் புதிதாக கட்டப்படவுள்ள கூடுதல் பள்ளிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekhar Babu ,Chennai Urdu Girls Primary School ,Chennai ,Hindu Religion and ,Charitable ,Affairs ,Thiru.V.K.Nagar Zone ,Pulyantoppu, Chennai ,Shekharbabu ,
× RELATED 1400 பாகநிலை முகவர்களுக்கு நலத்திட்ட உதவி