×

மாதவரத்தில் இருந்து 160 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், போக்குவரத்து துறை சார்பில் கட்டண விவரம் வெளியீடு

சென்னை : வடசென்னை மக்களுக்காக மாதவரத்தில் இருந்து 160 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் போக்குவரத்து துறை சார்பில் கட்டண விவரம் வெளியீடு செய்யப்பட்டது. மாதவரத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் ரெட்டேரி, அம்பத்தூர், மதுரவாயல் பைபாஸ் வழியாக பெருங்களத்தூர் செல்லும். மாதவரத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை 40 ரூபாயும், ரெட்டேரியில் இருந்து கிளாம்பாக்கம் வரை 35 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அம்பத்தூரில் இருந்து கிளம்பாக்கத்திற்கு 30 ரூபாயும், மதுரவாயலில் இருந்து கிளாம்பாகத்திற்கு 25 ரூபாயும், பெருங்களத்தூரில் இருந்து 10 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து வழக்கமாக பல்வேறு ஊர்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்துடன் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

The post மாதவரத்தில் இருந்து 160 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், போக்குவரத்து துறை சார்பில் கட்டண விவரம் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Madhavaram ,Chennai ,North Chennai ,Perungalathur ,Retteri ,Ampathur ,Maduravayal Bypass ,Dinakaran ,
× RELATED மாதவரம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு...