×

சாலையோர பூங்கா அமைக்கும் பணி அதிக மகசூல் பெற விதை பாிசோதனை அவசியம்

திருச்சி: அதிக மகசூல் பெறுவதற்கு விதை பரிசோதனை அவசியம் என்று திருச்சி மண்டல விதைப்பரிசோதனை அலுவலர் அறிவழகன் மற்றும் கரூர் மாவட்ட விதைபாிசோதனை நிலையத்தின் வேளாண்மை அலுவலர்கள் ரமேஷ்குமார், அபா்னா ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். விதைகளின் தரம் பயிர் விளைச்சல் மற்றும் பயிர் ஆரோக்கியத்தினை தீர்மானிக்கிறது. பயிர் உற்பத்தியில் ஏற்படும் அபாயங்களை குறைக்கிறது. பயிர் நடவு செய்வதற்கு முன் விதைகளின் தரம் எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும், தரமற்ற விதைகளை விதைப்பதால் ஏற்படும் நேரம் மற்றும் பண விரையங்களை தடுப்பதில் விதைப்பாிசோதனை முக்கிய பங்காற்றுகிறது. விதைகளின் முளைப்புத்திறனை அறிந்து கொள்வதன் மூலம் தேவையான மற்றும் சாியான விதை அளவை நிர்ணயம் செய்து, கூடுதல் செலவை குறைக்க உதவுகிறது.

The post சாலையோர பூங்கா அமைக்கும் பணி அதிக மகசூல் பெற விதை பாிசோதனை அவசியம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Zonal Seed ,Testing Officer ,Virujagan ,Karur ,District Seed Testing Station ,Ramesh Kumar ,Apna ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...