×

சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் ‘நெல் ப்ளூம்’ தெளிப்பு குறித்த வயல்வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆர்வமுள்ள விவசாயிகள் கலந்து கொள்ள அழைப்பு

திருச்சி: லால்குடி வட்டாரத்தில் நடைபெறவுள்ள சம்பா பருவ நெல் சாகுபடியில் மகசூலை அதிகரிக்க செய்யும் ‘நெல் ப்ளூம்’ தெளிப்பு குறித்த விழிப்புணர்வு வயல் வெளி விழாவில் கலந்து கொண்டு பயனடைய சிறுகமணி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் சம்பா பருவ நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற ‘நெல் ப்ளூம்’ என்ற பேரூட்ட, நுண்ணுட்ட, வளர்ச்சி ஊக்கிகள் கலந்த கலவை தெளிப்பு குறித்த விழிப்புணர்வு வயல் வெளி பயிற்சி வரும் பிப்.1ம் தேதி காலை 10:30 மணிக்கு, லால்குடி வட்டாரம், திண்ணியத்தை சேர்ந்த விவசாயி கண்ணன் என்பவரது வயல்வெளியில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் வருகையை முன்பதிவு செய்துகொள்ளலாம். இதுகுறித்த தகவல்களுக்கு இணை பேராசிரியர் முனைவர் ராஜா பாபுவை 0431-2962854 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 91717 17832 என்ற செல்போன் எண்ணிலோ அலுவலக நேரமான காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு மற்றும் குறிப்பேடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் ‘நெல் ப்ளூம்’ தெளிப்பு குறித்த வயல்வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆர்வமுள்ள விவசாயிகள் கலந்து கொள்ள அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Sirukamani Agricultural Science Center ,Trichy ,Samba ,Lalgudi ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...